News Just In

11/15/2023 04:06:00 PM

மட்டக்களப்பில் புதிய கல்வி நிலையம் திறந்து வைப்பு!




மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் American ihub எனும் கல்வி நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜங் , மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரினால் American ihub இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது,

உயர்தர கற்கை நெறியை நிறைவு செய்தவர்களுக்கு உயர் தொழில்நுட்ப கற்கையில் திறனை வளர்த்துக்கொள்ளல், ஆங்கில அறிவினை மேம்படுத்தல், இளைஞர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கான புலமை பரிசில்கள் வழங்குதல் போன்ற பல்வேறு அபிவிருத்திகளை மையப்படுத்தி இக் கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

No comments: