News Just In

11/23/2023 02:22:00 PM

தலைவர் பிரபாகரன் யார்!சி.வி.கே.சிவஞானம்



இன்னும் பத்து வருடங்களில் தலைவர் பிரபாகரன் யார் என கேட்கக்கூடிய நிலை தான் இங்கு காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்தப்படும் "கார்த்திகை வாசம்" மலர்கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்னும் பத்து வருடங்களில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் யார் என இருக்கக்கூடிய நிலைமை தான் இங்கு காணப்படுகின்றது.

எங்கள் மக்களிடத்தில் மறதி என்கின்ற பண்பு வளர்ந்து வருகின்றது இதன் காரணமாக மக்கள் பழைய விடயங்களை மறக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

குறிப்பாக ஐங்கரநேசன் என்பவர் ஒரு தமிழ்த் தேசிய உணர்வோடு நீண்ட காலமாக பயணித்து வருபவரினால் இந்த மர நடுகை மாதம் ஆண்டுதோறும் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது

குறிப்பாக மாகாண சபை செயற்பாட்டில் இருந்தபோது திரு ஐங்கரன் அவர்கள் விவசாய அமைச்சராக இருந்தபோது இந்த கார்த்திகை மாதத்தினை மர நடுகை மாதமாக பிரகடனப்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

எனவே மாகாண சபையின் அவைத்தலைவர் என்ற ரீதியில் அந்த தீர்மான நிறைவேற்றியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு.

ஆகவே எனக்கு அதில் ஒரு சந்தோஷம் உள்ளது அதாவது இந்த மரநடுகை மாதத்தை தீர்மானமாக நிறைவேற்றியதில் நானும் பங்காற்றி இருக்கின்றேன் என

ஐங்கரநேசன் மாத்திரம் தற்பொழுது இந்த மரநடுகையை செயற் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்

ஆனால் மாகாண சபை செயற்பாட்டில் இருந்த காலத்தில் இந்த செயற்திட்டமானது வடக்கு மாகாணத்தில் எல்லா மாவட்டத்திலும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறிவிட்டது மரநடுகை தற்பொழுது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது அது ஐங்கரநேசனால் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றது

ஐங்கரநேசன்இந்த மண்ணினுடைய மரநடுகை மைந்தனாக அந்த பெருமையோடு மேலும் இந்த கைங்கரியத்தினை முன்னெடுப்பதற்கு இந்த சமூகம் அவரோடு இணைந்து பயணிக்க வேண்டும் ஆதரிக்க வேண்டும் ஒத்துழைக்க வேண்டும் இந்த விடயத்தினை தொடர்ச்சியாக அவர் முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments: