News Just In

11/23/2023 08:41:00 PM

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி 35 சட்டத்தரணிகள் முன்னிலையாக தீர்மானம்!


வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி இந்த வழக்கில் 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகத் தீர்மானித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சட்டத்தரணிகளும் இந்த நடவடிக்கையில் இணைந்துகொள்ள வேண்டும் என்று சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

வட்டுக்கோட்டை, சித்தன்கேணியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இறப்பதற்கு முன்னர் இளைஞர் பேசிய காணொளிப் பதிவொன்றில், பொலிஸார் தன்னைச் சித்திரவதை செய்தனர் என்று கூறியிருந்தார். இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையில் தாக்குதல் மற்றும் சித்திரவதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நாளை 24ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

No comments: