News Just In

10/26/2023 02:35:00 PM

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணத்தில் திருத்தம்; அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

 அடையாள அட்டை புகைப்படப்பிடிப்பாளர் பதிவுக்கட்டணம் ரூ. 15,000 ஆக அதிகரிப்பு




– பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான வருடாந்தக் கட்டணம் ரூ. 2,000 இலிருந்து ரூ. 3,000
– சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் ரூ. 500 இலிருந்து ரூ. 1,000

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் ரூ. 500 இலிருந்து ரூ. 1,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அடையாள அட்டைகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கான கட்டணம் ஒன்லைன் முறையில் சமர்பித்தால் 25 ரூபாவாகவும், பௌதீக ஆவணங்கள் மூலமாகவோ அல்லது ஆணையர் நாயகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு முறை மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட்டால் 500 ரூபாவாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அடையாள அட்டை புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் 15,000 ரூபாவாக இருக்க வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன், 10,000 ரூபாவாக இந்த கட்டணம் காணப்பட்டது.

பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான வருடாந்தக் கட்டணம் ரூ. 2,000 இலிருந்து ரூ. 3,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


No comments: