மில்கோ நிறுவனத்தின் ஊழியர்கள் 13 பேரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மில்கோ நிறுவனத் தலைவர் ரேணுகா பெரேராவை நேற்று (25) பிற்பகல் பிரதான அலுவலகத்தில் பணயக்கைதியாக வைத்திருந்த சம்பவம் தொடர்பிலேயே மில்கோ நிறுவன ஊழியர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கை செலவு கொடுப்பனவை நீக்கியமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு அலுவலகத்தில் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், பொலிஸாரின் தலையீட்டில் மில்கோ நிறுவனத்தின் தலைவர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட 13 ஊழியர்களும் இன்று (26) பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
No comments: