
மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் நடவடிக்கையால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மயானத்தில், கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்மை தொடர்பில், மயானப் பகுதிக்குச்
சென்ற அம்பிட்டிய தேரர் கடும் ஆட்சேபனை எழுப்பினார்.
தாகாத வார்த்தைப் பிரயோகத்தினையும் அவர் மேற்கொண்டார்.
மயானத்தில் கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டமை தொடர்பில், இரு நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாநகர சபைக்கு முறைப்பாடொன்றை
அம்பிட்டிய தேரர் வழங்கிய நிலையில், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னரே, இரு முச்சக்கர வண்டிகளில் வருகை தந்த அம்பிட்டிய தேரர் தலைமையிலான குழு, கட்டட இடிபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டி, இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வகையில்,கருத்துக்களை வெளியிட்டு, பதற்ற நிலையைத் தோற்றுவித்திருந்தனர்.
No comments: