News Just In

9/08/2023 04:58:00 PM

சின்னதிரை எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் மரணம்!



டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போது பாதியில் நடிகர் மாரிமுத்து வெளியேறியதாக, கடைசி தருணத்தில் அவருடன் பணியாற்றிய சக நடிகர் கமலேஷ் தெரிவித்துள்ளார்.

திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் மாரிமுத்துவின் மரணம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளைத்திரை, சின்னத்திரை நடிகர், நடிகைகள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடைசியாக மாரிமுத்து டப்பிங் பேசியபோது உடன் இருந்த நடிகர் கமலேஷ் என்ன நடந்தது என்பது குறித்து மன வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மாரிமுத்துவின் கடைசி தருணத்தில் அவருடன் இருந்தது குறித்து கமலேஷ் கூறுகையில், 'அண்ணன் மாரிமுத்துவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ரசிகர்களிடம் அண்ணன் அப்படியொரு பேரும், புகழும் எடுத்திருக்கிறார். நாங்கள் எல்லோருமே செட்ல அவர அண்ணன்-னு கூப்பிட்டு பழகிட்டோம். நான் தான் டப்பிங் ல கடைசியா அவரு கூட இருந்தேன்.

அவரு பாதி டப்பிங்கை முடிச்சிட்டு கிளம்பும்போது ரொம்ப suffocation-அ இருக்குனு சொல்லிட்டு வெளியே போனாரு. சரி, வெளியே காத்துவாங்கிட்டு வருவாருனு பாத்தா அவரு அப்படியே அங்கேயிருந்து வண்டிய எடுத்துட்டு ஹாஸ்பிடல் போயிருக்காரு போலருக்கு.

நாங்க டப்பிங் முடிச்சிட்டு வெளியே வந்து தேடி பாக்குறோம், அவரு ஆளா காணோம். அவங்க பொண்ணுக்கு போன் பண்ணப்போ சூர்யா ஹாஸ்ப்பிடல அட்மிட் ஆகிருக்காரு, இந்த மாதிரி ஆகிடுச்சு..வாங்க சீக்கிறோம்னு சொன்னாங்க.



நான் நேரா அங்க இருந்து வந்தேன். கண்ணிமைக்கும் நேரத்துல எல்லாமே நடந்துருச்சு. என்ன சொல்றதுன்னே தெரியல. இது வந்து பெரிய இழப்பு. நல்ல நடிகர்.. என்ன சொல்ல.. பேசவே முடியல.

அவரு நல்லா பழகுவரு, அந்த கதாபாத்திரத்தோட ஒன்றி இருப்பாரு. எல்லாருக்குமே அதை சொல்லுவாரு. சமீபத்தில் அவரு பிறந்தநாளுக்கு பெரிய ட்ரீட் கொடுத்தாரு.

கிட்டத்தட்ட 200, 300 பேருக்கு வாழை இலைல சாப்பாடு போட்டு பெரிய லெவல்ல பண்ணாரு. எல்லோருக்குமே அந்த பாசம் தான், ரொம்ப அன்பான மனுஷன்' என மனமுடைந்து பேசியுள்ளார்.

No comments: