News Just In

6/08/2023 06:15:00 PM

எம்வி எம்பிரஸ் சொகுசுக் கப்பல் திருகோணமலையை வந்தடைந்தது!



இலங்கையை வந்தடைந்த இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் பயணத்தை, இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால 05.06.2023 அன்று கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

இதன்படி சென்னையில் இருந்து புறப்பட்ட எம்வி எம்பிரஸ் என்ற சொகுசுக் கப்பல் இன்று திருகோணமலையை வந்தடைந்தது. திருகோணமலையை வந்தடைய அனைத்து ஏற்பாடுகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் செய்ததுடன், அவர் தலைமையில்,பிரதான செயலாளர்,ஆளுநரின் செயலாளர், திருக்கோணமலை கிழக்கு கடற்படை கட்டளை தளபதி,பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலர் உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.

மேலும் அதில் வருகை தந்த பயணிகளுக்கு, திருகோணமலையில் காணப்படும் சுற்றுலா தளங்களை பார்வையிடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டன.

(மொகமட் தஸ்ரிப் லத்தீப்)

No comments: