News Just In

6/09/2023 07:24:00 AM

கல்விப் பணியில் நூற்றாண்டு காணும் மட்/முனைக்காடு விவேகானந்தா! (1923 - 2023)

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசம் எனப்படும் முனைக்காட்டில் பல கல்விமான்களை உருவாக்கிய முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலயம் இன்று 09.06.2023 நூற்றாண்டு காண்கிறது.

இந்த நூற்றாண்டு வைபவ நிகழ்வுகள் இன்று, நாளை, நாளை மறுதினம் (09.06.2023 - 11.06.2023) பாடசாலை முதல்வர் திரு. மா. சாத்தியநாயகம் அவர்களின் தலைமையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. முதலாம் நாள் நிகழ்வில் நினைவுத்தூபி திறத்தலும், அதனைத் தொடர்ந்து ஊர்வல பவனியும் வலயமட்ட உள்ளக விளையாட்டு போட்டிகளும் இடம்பெறவுள்ளது.

இரண்டாம் நாள் நிகழ்வில் பல்லூடக அறை திறப்பு விழாவும் அதனைத் தொடர்ந்து உறவுகளுடன் உறவாடுவோம் நிகழ்வும் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து காட்சி கூடங்களை பார்வையிடல் நிகழ்வு நடைபெறும்.

மூன்றாம் நாள் இறுதி நிகழ்வில் கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்க உள்ளார். கெளரவ கோவிந்தம் கருணாகரன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் விஷேட அதிதியாகவும், செல்வி அகிலம் கனகசூரியம் மாகாண கல்விப் பணிப்பாளர் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பிக்க கெளரவ அதிதிகளாக ஓய்வுநிலை பேராசிரியர் மா. செல்வராஜா (வேந்தர், கிழக்கு பல்கலைக்கழகம்), திருமதி தெட்சனகெளரி தினேஷ் பிரதேச செயலாளர் (ம.தெ.மே) அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இறுதி நாள் நிறைவில் நூற்றாண்டு மலர் வெளியீடு, விவாத அரங்கு, கலை நிகழ்வுகளுடன் தேசிய மட்டத்தில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களுடன் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் கல்லூரி என்பவற்றிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கெளரவிப்பும் இடம்பெறும்.

பாடசாலை முதல்வர் திரு. மா. சாத்தியநாயகம் அவர்கள் தனது பணியில் இருந்து குறித்த தினம் ஓய்வுபெறும் வேளையில்  "தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் உயர் கெளரவமான "செம்கம்பள வரவேற்பும்" வழங்கப்படுவது சிறப்பு அம்சமாகும் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.









No comments: