நாடாளுமன்றத்தில் இன்றயை தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை அமைச்சர் மனுஷ நாணயக்கார சாடியமை மற்றும் இந்த சம்பவத்தை அவதானித்து பிரதி சபாநாயகர் அமைதியாக இருந்தமை உள்ளிட்ட சம்பவங்களால் அமளி துமளி நிலை ஏற்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சந்தர்ப்பத்தில் சாணக்கியன் குறுக்கிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது ''கொட்டியா எலியட்ட பென்னா'' என சாணக்கியனை மனுஷ நாணயக்கார சாடியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த சுமந்திரன் எழுந்து, மனுஷ நாணயக்கார சாணக்கியனை சாடிய போது பிரதி சபாநாயகர் அமைதியாக இருந்தமை மூலம் இனவாத முகம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக சபையில் அமளித் துமளி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: