News Just In

6/16/2026 06:13:00 PM

தென்கிழக்குப் பல்கலைக்கழகதிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்!

தென்கிழக்குப் பல்கலைக்கழகதிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்!



நூருல் ஹுதா உமர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட வெற்றிடங்களுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் புதிதாக நியமிக்கப்பட்ட உதவிப் பதிவாளர்கள், உதவி நிதியாளர் மற்றும் உதவி உள்ளக கணக்காய்வாளர் ஆகிய பதவிக்களுக்கு நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை 2026.06.15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிதாக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதுடன் தமது நியமனக் கடிதங்களுக்கமைய பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்கள் மற்றும் நிர்வாகப் பிரிவுகளுக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

இதன்படி, உதவிப் பதிவாளராக நியமிக்கப்பட்ட கோகுலவாணி அஜிலுத்தன் பொறியியல் பீடத்திற்கும், சுப்பையா கிருஷ்ணராஜா பதிவாளர் அலுவலகத்திற்கும், கிறிஸ்ற்ரி சௌமியா விமல் க்ருஷாந்தன் கலை மற்றும் கலாசாரப் பீடத்திற்கும், ஆர். பாத்திமா ராஜீ இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, விதுசன் திஷானி முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்திற்கும், திபிஷா ராகுலன் தொழில்நுட்பவியல் பீடத்திற்கும், மகாதேவன் சீதரன் உபவேந்தர் அலுவலகத்திற்கும் உதவிப் பதிவாளர்களாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், உதவி உள்ளக கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட என்.எம். முஹம்மத் இன்ஷாத் உள்ளக கணக்காய்வுப் பிரிவிற்கும், உதவி நிதியாளராக நியமிக்கப்பட்ட ஏ.டபிள்யூ. ஷானாஸ் பேகம் நிதி நிர்வாகப் பிரிவிற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நியமனங்கள் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கடமைகளைப் பொறுப்பேற்றதையடுத்து, பதிவாளர் எம்.ஐ. நௌபர் மற்றும் பிரதிப் பதிவாளர் பி.எம். முபீன் ஆகியோர் இணைந்து புதிய உத்தியோகத்தர்களை அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பீடங்கள் மற்றும் பிரிவுகளுக்கு உத்தியோகபூர்வமாக அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பிரிவுகளின் நிர்வாகப் பொறுப்பாளர்களுடன் அவர்களை அறிமுகப்படுத்தியதுடன், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் அமர்த்தி கடமைகளை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

புதிய நிர்வாக உத்தியோகத்தர்களின் இணைவு பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்கும், கல்வி மற்றும் நிர்வாக சேவைகளை வலுப்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

No comments: