கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகளை ஜூன் மாதம் 15ஆம் திகதி வெளியிடுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றது.
இந்தப் பரீட்சைக்காக நாடு முழுவதிலும் இருந்து 451,463 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: