முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான ஜெஸ்வெல் பிளேஸ் சந்தியில் பாதுகாப்பு கடமையின் இடையே பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவர் சக பொலிஸ் சார்ஜன்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்துக்கு செல்லும் வீதியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸ் காண்ஸ்டபிள் கடமையில் ஈடுபட்டிருந்த போது உறங்கியுள்ளார்.
பொலிஸ் சார்ஜன் அது தொடர்பில் பலமுறை எச்சரித்து கடமையில் அக்கறையுடன் செயற்படுமாறு அறிவுரை கூறிய நிலையில், ஆத்திரமடைந்துள்ள பொலிஸ் கான்ஸ்டபிள், T-56 துப்பாக்கியை பொலிஸ் சார்ஜன் பக்கம் திருப்பி தாக்க முற்பட்டதாகவும்,பின்னர் பொலிஸ் பரிசோதகர் கூச்சலிட்டு துப்பாக்கியை பறித்துச் சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நான்கு வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் திணைக்களத்தில் சேவையில் இணைந்து கொண்டவர் எனவும் 25 வயதான பொல்பித்திகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சந்தேகநபர் நுகேகொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மிரிஹான தலைமையகம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: