News Just In

7/23/2022 12:59:00 PM

களுவாஞ்சிகுடியில் மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் எரிபொருள் வழங்கி வைப்பு - காத்திருந்தவர்கள் எரிபொருளின்றி திரும்பிச் சென்றனர்!

மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்றயதினம் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு எரிபொருள் வந்ததையடுத்து, மக்கள் அரசாங்கம் அறிவித்துள்ளதற்கிணங்க வாகனத்தின் இறுதி இலக்கமாகவுள்ள, 6, 7, 8, 9, ஆகிய இலக்கமுடைய வாகனங்களுடன் எரிபொருள் நிரப்புவதற்கு மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

எனினும் நண்பகலுக்குப் பின்னர் பெற்றோல் முடிவடைந்துள்ளதாக அறிவித்ததையடுத்து, மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. மிக நீண்ட நேரமாக காத்திருந்த மக்களுக்கு பெற்றோல் வழங்கப்படாமையால் அதிருப்தியடைந்தைமை குறித்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது….

வெள்ளிக்கிழமை(22) முச்சக்கர வண்டிகளுக்கு 2000 ரூபாவிற்கும், மோட்டார் சைக்கிளுக்கு 1500 ரூபாவிற்கும், காருக்கு 7000 ரூபாவிற்குமாக, 774 வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டன. எனினும் அரசாங்கம் இன்றயத்தினத்தில் எரிபொருள் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ள 6, 7, 8, 9, ஆகிய இறுதி இலக்க வாகனங்களை விடவும் ஏனையோரும் கொள்வனவு செய்திருந்ததை அவதானிக்க முடிந்தது. இந்நிலையில் உரிய அனுமதி பெற்று கலன்களில் டீசல் கொள்வனவு பெறுவதற்கு விவசாயிகள் காத்திருந்த நிலையிலும், அவர்களுக்கு டீசல் வழக்கப்படுவது தாமதித்து வந்தன. பின்னர் விவசாயிகள், மற்றும் எரிபொருள் நிரப்பு உரிமையாளரிடமும் பிரதேச செயலாளர் கலந்துரையாடியதற்கு இணங்க அனுமதி பெற்று வந்த விவசாயிகளுக்கு 20000 ரூபாவிற்கும், ஏனைய விவசாயிகளுக்கு 10000 ரூபாவிற்கும் டீசல் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

எனினும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள “குடும்ப வினியோக அட்டை” எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வரப்படுகின்றன. அதுபோல் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், எமது உத்தியோகஸ்த்தர்கள் கடமையிலீடுபட்டு இக்குறித்த அட்டையில் பதிவீடு செய்துத பின்னர் எரிபொருள் வழங்கினால் எதுவித சிக்கலுமின்றி அனைவருக்கும் சீராக எரிபொருள் வழங்க முடியும், ஆனால் இன்றயத்தினம் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. இதற்கு பொதுமக்களினதும், பொலிசாரினதும், ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

எனவே அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள் குடும்ப அட்டையின் பிரகாரம் அதில் பதிவீடு செய்த பின்னர் எரிபொருளை வழங்கினால் எதுவித தடைகளுமின்றி அனைவருக்கும் சீராக எரிபொருள் வழங்கப்படும் எனவே பொதுமக்களும், பொலிசாரும், இதங்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

.எச்.ஹுஸைன் 

No comments: