மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட அரச ஆதரவு அரசியல்வாதிகளில் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மன்றேசா, வீதியில் உள்ள சதாசிவம் வியாழேந்திரன், ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசாங்க ஆதரவு அரசியல்வாதிகளில் அலுவலகங்கள் இல்லங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக தற்போது நாடளாவிய ரீதியில் காவல்துறை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர் உட்பட பல பகுதிகளில் காவல்துறையினர் வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதுடன் மாவட்டம் முற்றாக செயலிழந்த நிலையில் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: