News Just In

5/10/2022 05:43:00 PM

அசனி சூறாவளி!





மேற்கு மத்திய மாகாணத்தில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த அசனி சூறாவளி தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கே 680 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது வடமேற்கு நோக்கி நகர்வதாகவும் நாளைய தினம் சூறாவளியாக வலுவிழக்க கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதோடு, இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதால், மீனவ மற்றும் கடற்படை சமூகம் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

No comments: