News Just In

5/27/2022 06:36:00 AM

ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை: இனி இதற்கு வயது வரம்பு தேவையில்லை!


ராணுவத்தில் சேர ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ரஷ்யர்களின் வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த உச்ச வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்துள்ளது.

இது தொடர்பில் ரஷ்யா கூறுகையில், இந்த புதிய நடைமுறை தேவைக்கு ஏற்ற, சிறப்பு தகுதி மற்றும் திறன் உள்ளவர்களை பணியமர்த்துவதை எளிதாக்கும். இந்த புதிய மசோதா படி, இன்னும் இளம் வீரர்கள் நிறைய பேரை ராணுவத்தில் இணைத்து கொள்ளலாம்.

அதேசமயம், ராணுவத்தில் இணைவதற்கான உச்ச வயது வரம்பு 40-ஆக இருந்த நிலையில், ராணுவ சேவையில் தொழில்நுட்பம், மருந்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் அனுபவம் வாய்ந்தவர்களை இணைப்பதற்கு இந்த வயது வரம்பு ரத்து உதவும்.

சமீபத்திய ஆண்டுகளில், ரஷ்ய இராணுவம் தன்னார்வலர்களை அதிகளவில் நம்பியுள்ளது. அங்கு 18-27 வயதுடைய அனைத்து ஆண்களும், ஒரு வருட கட்டாய இராணுவ சேவைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

ஆனால், பலர் பல காரணங்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் உரிய காரணம் கூறினால் மட்டுமே ராணுவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இவ்வாறு ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

No comments: