News Just In

3/07/2022 06:24:00 AM

இன்று பாடசாலை செல்லவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்!

விடுமுறைக்கு பின்னர் அரச பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்படுகின்ற நிலையில் தடிமல், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்த்துகொள்ள வேண்டும் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

அரச பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்படும் நிலையில் கொவிட் தொற்றில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது தொடர்பாக குறிப்படுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்க பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்படுகின்ற நிலையில் மாணவர்களுக்கான சுகாதார வழிகாட்டல்கள் ஏற்கனவே பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் தடிமல், இறுமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்த்துகொள்ளவேண்டும்.

அவ்வாறான மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதன் மூலம் ஏனைய மாணவர்களுக்கும் அந்த நோய் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. அத்துடன் குறித்த நோய் அறிகுறி குறைந்த பின்னர் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பாக பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.

ஏனெனில் நாட்டில் கொவிட் சிறுவர்களுக்கான கொவிட் தொற்று கடந்த மாதங்களில் அதிகரித்து இருந்தபோதும் தற்போது ஓரளவு குறைவடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். அதனால் மாணவர்கள் விடயத்தில் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.

குறிப்பாக 12வயதுக்கு குறைந்த பிள்ளைகள் கொவிட் தடுப்பூசி ஏற்றாதமையாமல், பெற்றோர்கள். ஆசிரியர்கள். பாடசாலை பஸ் சேவை நடத்துநர், ஓட்டுநர் போன்றவர்கள் பூரண கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருப்பது முக்கியமாகும்.

அதேபோன்று பாடசாலைகளில் மாணவர்கள் ஒன்றுகூடுவதையும் தவிர்ப்பதற்கு ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

No comments: