News Just In

1/02/2022 02:10:00 PM

கற்பனையில் போலியான செய்திகளை பரப்பி வடகிழக்கை இணைக்கும் விடயத்தை கையாள தீயசக்திகள் முனைகிறது : அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா.



நூருல் ஹுதா உமர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தனியான முஸ்லிம் கூட்டணியை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர் என்று தமிழ் இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் உண்மை நிலையை அறிய அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவானது அந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வினவியபோது அந்த செய்தியானது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியென்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு புதிய கூட்டணி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்பது முற்றிலும் கற்பனையான பொய்யான செய்தியாகும். அப்படியான எவ்வித முஸ்தீபுகளையும் நாங்கள் செய்யவில்லை என்றும் உறுதிபட எங்களுக்கு தெரிவித்தனர் என அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்கள், நாட்டில் இப்போது பேசுபொருளாக மாறியுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்ப தமிழ் கட்சிகளும் சில முஸ்லிம் தலைவர்களும் எடுக்கும் முயற்சிகளும், சதித்திட்டங்களும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பையும் கண்டனங்களையும் சந்தித்து வருவதனால் வெளிநாடொன்றின் தலையீட்டினால் இவ்வாறான பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை அந்த செய்தியின் பால் திசைதிருப்பிவிட்டு தமது இலக்கினையும் காரியங்களையும் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறார்கள். இவர்களின் சதியில் மக்கள் விழமாட்டார்கள் எனும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறான பொய்யான செய்திகளை பரப்பி மக்களை திசை திருப்ப முடியும் என்று இந்த நவீன காலத்திலும் நம்புபவர்கள் அதி உயர்ந்த முட்டாள்களாகவே இருக்க முடியும் என்றனர் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: