News Just In

12/06/2021 08:58:00 PM

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் முப்பத்தெட்டு (38) பயனாளிகளுக்கு பத்தொன்பது இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார பொருட்கள் வழங்கி வைப்பு

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக சௌபாக்கியா வேலைத் திட்டத்தின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் முப்பத்தெட்டு (38) பயனாளிகளுக்கு பத்தொன்பது இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாழ்வாதார பொருட்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்காளர் அஹமட் சஜ்ஜாத், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ்;, ஓட்டமாவடி மற்றும் வாழைச்Nனை பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.ஐ.தஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரின் பிரதேச அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக சௌபாக்கியா வேலைத் திட்டத்தின் கீழ் சமுர்த்தி திணைக்களத்தினால் இரண்டு இலட்சம் மனைப்பொருளாதார திட்டத்தில் தையல் இயந்திரம், குளிர்சாதன பெட்டிகள், இலத்திரனியல் உபகரணங்கள் போன்ற வாழ்வாதார பொருட்கள் முப்பத்தெட்டு (38) பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இவ் வேலைத்திட்டத்திற்கு மக்கள் பங்களிப்பு வழங்குவதுடன் ஒரு குடும்பத்திற்கு ஐம்பதாயிரம் ரூபா வீதம் சமுர்த்தி திணைக்களத்தினால் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ்; தெரிவித்தார்.

எஸ்.எம்.எம்.முர்ஷித் 







No comments: