News Just In

11/16/2021 06:51:00 AM

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இம்மாதம் திறக்கப்படும் - ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் - மீரிகம பகுதி இந்த மாதம் திறக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நெடுஞ்சாலையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: