News Just In

11/16/2021 06:42:00 AM

அடுத்த வருடம் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்! - அமைச்சர் மஹிந்த அமரவீர

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் இன்று அதிகரித்துள்ளதாகவும் அடுத்த வருடம் இந்த நிலைமை மேலும் கடினமாகும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “அரசாங்கம் நிதிப் பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இன்று நாம் வாங்கிய கடனுக்கான தவணை மற்றும் வட்டியை கட்ட மீண்டும் கடன் வாங்க வேண்டியுள்ளது. அந்தளவுக்கு இன்று நம் நாடு சென்றுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்து விட்டன என்பது எங்களுக்குத் தெரியும். இதை நாம் இப்போது எதிர்கொள்ள வேண்டும். இது நாளை முடிவடையும் என்று சொல்ல முடியாது.

இந்த நிலை அடுத்த ஆண்டு இன்னும் கடினமாக இருக்கலாம். அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படுவதை நாம் அறிவோம். ஆனால் செய்வதற்கு ஒன்றுமில்லை. தற்போது வீடுகள் கட்டுவது கனவாகி வருகிறது. ஒவ்வொரு பொருளின் விலையும் உயர்ந்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து எதிர்கொள்வோம். எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று உலக உணவுத் திட்டம் கணித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: