News Just In

11/16/2021 10:56:00 AM

விளாஸ்டர் பிரீமியர் லீக் கிறிக்கட் சுற்றுப்போட்டி : சம்பியனானது பூம் பூம் பிளாஸ்டர் அணி




சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த விளாஸ்டர் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டி இரண்டாம் சீசன் கடந்த சனிக்கிழமை காலை சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மைதானத்தில் சுற்றுப்போட்டி முகாமையாளரும், மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளருமன எம். பி.எம். றஜாயின் தலைமையில் ஆரம்பமானது.
மாஸ்டர் பிளாஸ்டர், ரெட் லயன்ஸ், பூம் பூம், கிங்ஸ் ஒப் விலாஸ்ட்டர் என நான்கு அணிகள் கலந்து கொண்ட இந்த சுற்றுப்போட்டியின் இறுதியாட்டமும் பரிசளிப்பும் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
பிரீமியர் லீக் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய அதிபர் ஏ.சி.ஷரீபுத்தீன், உதவியதிபர் டீ.கே.எம். சிராஜ், கழக தவிசாளர் ஏ.எல். முஹம்மட், கழக தலைவர் முகம்மட் இம்தாத், கழக பொதுச்செயலாளர் ஏ.சி.எம். நிஸார் , முக்கிய நிர்வாகிகள் என பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மாஸ்டர் பிளாஸ்டர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதற்கினங்க முதலில் துடுப்படுத்தாடிய பூம் பூம் அணியின் அதிரடியான துடுப்பாட்டத்தினால் 10 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பூம் பூம் அணி மாஸ்டர் பிளாஸ்டர் அணியினருக்கு 133 எனும் வெற்றியிலக்கை நிர்ணயித்தது. இருந்தாலும் 8.5 ஓவர்களை சந்தித்து சகல விக்கட்டுக்களையும் இழந்த மாஸ்டர் பிளாஸ்டர் 85 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதனால் 45 ஓட்டங்களினால் பூம் பூம் அணி சம்பியனாக வெற்றிவாகை சூடியது. இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக பூம் பூம் அணி வீரர் ஏ.எம். இஸட். இஸ்ரத் தெரிவானார். தொடர்பின் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக 172 ஓட்டங்களை குவித்த பூம் பூம் அணி வீரர் ஏ.என்.எம். ஆபாக்கும், அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய வீரராக 08 விக்கட்டுக்களை வீழ்த்திய பூம் பூம் அணி வீரர் ஏ.எம். இஸட். இஸ்ரத்தும் தெரிவானதுடன் 11 பந்துகளில் 52 ஓட்டங்களை குவித்த ரெட் லயன்ஸ் அணியின் வீரர் சி.எம்.எம். முனாஸ் மற்றும் சிறந்த களத்தடுப்பை மேற்கொண்ட ஏ.கே.எல். அப்லால் ஆகியோர் சிறப்பு விருதுகளையும் பெற்றுக்கொண்டனர்.






UMAR LEBBE NOORUL HUTHA UMAR

No comments: