News Just In

11/16/2021 08:28:00 PM

காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பாக ஆராயும் கிழக்கு மாகாணத்திற்கான 5 வது விசேட வழிகாட்டல் குழு மாநாடு

காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பாக ஆராயும் கிழக்கு மாகாணத்திற்கான 5 வது விசேட வழிகாட்டல் குழு மாநாடு இன்று 16.11.2021 திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பீ.வணசிங்க தலைமையில் இன்று ஆரம்பமாகிய காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பாக ஆராயும் 5 வது விசேட வழிகாட்டல் குழு கூட்டமானது மட்டக்களப்பு சர்வோதயம் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

கமத்தொழில் அமைச்சின் செயற்படுத்தப்படுகின்ற காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் ராஜ கருணா அவர்கள் பங்கேற்ற குறித்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உள்ளிட்ட கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன திணைக்களங்கள் உள்ளிட்ட துறைசார் அமைச்சுக்களின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

கமத்தொழில் அமைச்சின் ஊடாக உலக வங்கியின் கடன் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பாக ஆராயும் குறித்த கலந்துரையாடலின் போது நீர்ப்பாசன குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள் புனரமைப்பது தொடர்பாகவும், அதன் ஊடாக விவசாயிகளுக்கு பாரியளவில் நன்மைகளை பெற்றுக் கொடுத்தல் தொடர்பாகவும் விசேடமாக ஆராயப்பட்டது.

இலங்கையின் ஆறு மாகாணங்களிலும் 11 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டமானது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் திருகோணமலை ஆகிய 3 மாவட்டங்களிலும் இத்திட்டமானது தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், திருகோணமலை மாவட்டத்தில் யானோயா, மட்டக்களப்பு மாவட்டத்தில் முந்தனையாறு மற்றும் அம்பாரை மாவட்டத்தில் கேடோயா, கரந்தி ஒயா போன்ற ஆற்றுப்படுக்கைகளை மையப்படுத்திய குளங்கள் புனரமைக்கப்படவுள்ளதுடன் அவற்றில் சில குளங்கள் தற்போது புனரமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இத் திட்டத்தை எவ்வாறு சீராகவும் விரைவாகவும் அமுல்படுத்துவது மற்றும் இவற்றினை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்களை எவ்வாறு சீர் செய்வது என்பது தொடர்பாகவும் குறித்த மாநாட்டின் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

.எச்.ஹுஸைன் 







No comments: