News Just In

7/12/2021 08:49:00 PM

அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு...!!


காணொளி- https://youtu.be/P7pNN-dy158
எமது பொதுச்செயலாளர் உட்பட 30 பேர் பாராளுமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஜோன் கொத்தலாவ தனியார் கல்வி நிலையமாக மாற்றும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்து பின்னர் தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்காக இன்று முதல் சகல இணையவழி கல்வி நடவடிக்கைகளில் இருந்தும் அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 8ஆம் திகதி தமது ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் உட்பட 30 பேர் பாராளுமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஜோன் கொத்தலாவ தனியார் கல்வி நிலையமாக மாற்றுகின்ற இராணுவ மயமாக்கலுக்கு உடபடுத்தப்பக்கூடிய கல்லூரியாக மாற்றுவது தொடர்பாக கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டு தற்போது தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் தனிமைப்படுத்தப்பட்ட இந்த நிலையில் இந்த அடக்கு முறையான நிகழ்வை இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட சகல சங்கங்களும் அவரது விடுதலையை வேண்டி பல்வகையான அழுத்தங்களை கொடுத்து கொண்டிருக்கின்ற நிலையில்

இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட ஏனைய சங்கங்கள் இன்றிலிருந்து தங்களது இணையவழி மூலமான கற்றல் செயற்பாட்டில் இருந்து விலகியிருக்கின்றார்கள்.

இதேவேளை சகல பிராந்திய நிலையங்களில் இருந்தும் இந்த இணையவழி கல்வி செயற்பாடுகளில் இருந்து ஆசிரியர்கள் விலகிக் கொள்வதோடு உயர்தரப்பரீட்சைக்காக இணையம் ஊடாக விண்ணப்பிப்பதில் இருந்தும் விலகிக்கொள்கின்றார்கள்.

இன்று போதைவஸ்து தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் படுகொலைகளுக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளியில் அரசியல்வாதிகளாக வந்து கொண்டிருக்கின்ற நேரங்களில் நமது தோழர்கள் ஜோசப் ஸ்டாலின் உட்பட இந்த நாட்டினுடைய அரசியல் அமைப்புக்கும் இந்த நாட்டின் இறையாண்மைக்கும் ஜனநாயக ரீதியில் போராடிக் கொண்டிருந்த எமது போராளிகள் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்பதனை நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த சம்பவத்திற்கு முழுப் பொறுப்பினையும் நமது கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களே பொறுப்புக்கூற வேண்டும் இந்த அமைச்சரே இலங்கையினுடைய அரசியலமைப்புக்கு சத்தியபிரமாணம் செய்து இந்த கல்வி அமைச்சை பொறுப்பெடுத்திருக்கின்றார் எனவே இலங்கையினுடைய புனிதமான அரசியலமைப்புக்கு மீறி நடைபெற்ற இந்த சம்பவத்தையும் கல்வி உயர்கல்வி ஆகியன ஒரே அமைச்சுக்கு கீழ் இருக்கின்ற இந்த காலகட்டத்தில் அவர் இந்த சட்ட மூலத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் கிழித்து எறிந்துவிட்டு இந்த பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என்பதனையும் நாங்கள் அழுத்தமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

பல ஆண்டுகளாக பொருத்தமான சம்பளம் இல்லாமல் இந்த ஆசிரியர்கள் அதிபர்கள் தங்களது கடமைகளை இந்த நாட்டினுடைய கல்விக்காக அர்ப்பணித்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த அதிபர்கள் ஆசிரியர்கள் அவர்களினுடைய சேவையினை மற்றும் உரிமையினை முறியடிக்க வேண்டும் என்கின்ற காரணத்திற்காகத்தான் நமது தோழர் ஜோசப் ஸ்டாலின் உட்பட ஏனைய சகோதரர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

நாங்கள் சம்பள உயர்வினை கோரி பல மாகாணங்களில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து இருந்தோம் இந்த அரசானது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தது ஏனென்றால் ஆசிரியர்களும் இந்த நியாயமான போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.

மீண்டும் அவசர அவசரமாக பாடசாலைகளை ஆரம்பித்து இருக்கவேண்டிய இந்த நிலையில் அரசு எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது அதாவது தோல்வியடைந்த கல்விக் கொள்கையில் அரசு தற்போது பொதுச் செயலாளர் உட்பட ஏனையோரையும் கைது செய்து இன்று அந்த அதிபர் ஆசிரியர்களினுடைய சம்பள அதிகரிப்பு தொடர்பான கோரிக்கைகளை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

No comments: