News Just In

7/13/2021 11:19:00 AM

விவசாய சேதன உரத்தை தயாரித்து பயன்படுத்துவற்காக விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு...!!


எதிர்வரும் பெரும்போகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நெற் செய்கைக்கான விவசாய சேதன உரத்தை தயாரித்து பயன்படுத்துவற்காக விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, சேதன உரத்தை தயாரிப்பதற்கு 1 ஹெக்டயருக்கு 12 ஆயிரத்து 500 ரூபா வீதம் அதிகபட்சமாக 2 ஹெக்டயர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெரும்போகத்திற்கான 8 இலட்சம் ஹெக்ரயர்கள் அளவில் நெற் செய்கைக்கான சேதன உரத்தைத் தயாரித்துக் கொள்வதற்காக கமத்தொழில் அமைச்சு இந்த வேலைத்திட்டத்தினை தயாரித்துள்ளது.

கமநல சேவைகள் திணைக்களத்தின் வழிகாட்டலின் அடிப்படையில், விவசாயிகள் தரமான சேதன உரத்தைத் தயாரிப்பதற்கும், அனுமதிப்பத்திர உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளையின் அளவுகளை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, சேதன உரத்தை தயாரிப்பதற்காக விவசாயிகளுக்கான குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: