News Just In

7/13/2021 09:16:00 AM

நிந்தவூர் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர்வழங்கலும்.!!


(நூருல் ஹுதா உமர்)
குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சமூக அமைப்பினால் நிந்தவூர் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு இலவச குடிநீர் தாங்கி நிர்மாணித்து இலவச நீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு திங்கட்கிழமை நிந்தவூர் கொரோனா சிகிச்சை நிலையத்தில் நடைபெற்றது.

அரச காரியாலயங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் வழங்குதல் மற்றும் பல சமூக நல வேலைத்திட்டங்களை அந்நூர் சமூக அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக அந்நூர் சமூக அமைப்பின் பிரதேச இணைப்பாளர் ஐ.எம். றிசாட்டின் நெறிப்படுத்தலில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலாளர் டீ.எம். அன்ஸார் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் இலங்கை அந்நூர் சமூக அமைப்பின் தவிசாளர் எஸ்.எம். அலியார் ஹாஜி, பொது வைத்திய நிபுணர் டாக்டர் ஷபிக் உட்பட வைத்தியர்கள், தாதிகள், அந்நூர் சமூக அமைப்பின் தேசிய இணைப்பாளர் ஏ.எம். சலீம், அந்நூர் சமூக அமைப்பின் பிரதேச இணைப்பாளர்களான ஐ.எம். றிசாட், யூ.எல். அஸ்லிம் உட்பட நலன்விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர். மின்தடைகளின் போது பாதிக்கப்படும் நோயாளிகளின் நன்மைகருதி மின்பிறப்பாக்கி ஒன்றினை பெற்றுத்தருமாறு கோரிய மகஜரொன்றும் இதன்போது இலங்கை அந்நூர் சமூக அமைப்பின் தவிசாளரிடம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் கையளித்தார்.







No comments: