News Just In

6/04/2021 02:17:00 PM

மட்டக்களப்பு- ஓட்டமாவடி பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இல்லை...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில், சபை உறுப்பினர்களான எம்.ஐ.ஹாமீத் லெப்பை, ஏ.ஜீ.அஸீஸுல் ரஹீம், எம்.ரீ.எம்.அன்வர், ஏ.ஜீ.அமீர் ஆகியோருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று கிடைக்கப் பெற்றுள்ளதாக சபையின் உறுப்பினர் எம்.ஐ.ஹாமீத் லெப்பை தெரிவித்தார்.

No comments: