News Just In

6/04/2021 02:52:00 PM

திருகோணமலை- குச்சவெளியில் மீனவர்களில் பொருளாதாரம் பாதிப்பு,மானிய உதவிகள் பெற்றுத்தருமாறு கோரிக்கை...!!


எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரசின் தாக்கம் தாக்கமாகவும் பயணத்தடைகள் மற்றும் காலநிலையின் மாற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாது வீடுகளிலே முடங்கியுள்ளதால் படகுகள் கடற்கரையோரங்களில் காணப்படுகின்றன.

தற்போது கடலில் அதிக காற்று வீசுவதாகவும்,பயணத்தடைகள் மற்றும் கொரோனா வைரசின் பயம் காரணமாக கடலுக்குச் தாம் செல்வதில்லை எனவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குச்சவெளி,புல்மோட்டை,நிலாவெளி,இறக்கக்கண்டி,மற்றும் சலப்பையாறு போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்லாது வீடுகளிலே தாம் இருப்பதாகவும் தமது பொருளாதாரம் தொழில் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மீனவர்களுக்கு அரசாங்கம் கொரோனா ஐந்தாயிரம் நிதியினை தவிர வேறு ஏதாவது மானிய உதவிகளை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.


No comments: