News Just In

6/04/2021 06:24:00 PM

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கி வைப்பு...!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாட்டில் தற்போது துரிதமாக பரவிவரும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பணவு நாடு பூராகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கிராம அதிகாரி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு கிராம சேவை அதிகாரி எஸ்.வரதராஜன், புதுக்குடியிருப்பு சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி.கிருஷாந்தி ஜனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கொடுப்பனவினை வழங்கி வைத்தனர்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள சமுர்த்தி முத்திரை பெறும் 201 குடும்பமும், முதியோர் கொடுப்பனவு பெறும் 26 நபர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏழு நபர்கள், விவசாய ஓய்வூதியக் கொடுப்பனவு பெறும் மூன்று நபர்களுமாக 237 நபர்களுக்கு கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு கிராம சேவை அதிகாரி எஸ்.வரதராஜன் தெரிவித்தார்.











No comments: