News Just In

6/09/2021 05:08:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் சினோபாம் தடுப்பூசி ஏற்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கை இன்று முன்னெடுப்பு!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 25,000 தடுப்பூசிகள் முதல் கட்டமாக கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் இரண்டாம் நாளாகிய இன்று புதன்கிழமை 1500 தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு, காத்தான்குடி பிரதேச செயலக பிரிவு, மண்முனைபற்று பிரதேச செயலக பிரிவு உள்ளிட்ட இடங்களில் குறித்த கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டது.

காத்தான்குடி பிரதேசத்தில் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அத்துடன், மண்முனைப்பற்று பிரதேசத்தில் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் இராணுவத் தரப்பு பிரதானி 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், காத்தான்குடி பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.














No comments: