News Just In

6/12/2021 09:31:00 PM

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் 2015ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களினால் 100 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு...!!


மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் "என்றும் சிவானந்தியன்" எனும் 2015ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு கொரோனா தொற்று இடர்கால நிவாரணங்கள் இன்று(2021.06.12) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சிவானந்தா தேசிய பாடசாலையின் 2015ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டிலும், நிதி உதவியிலும் 100குடும்பங்களுக்கு 3000ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இனங்கண்டு மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தின் மயிலவெட்டுவான் பகுதியில் 60 குடும்பங்களுக்கும், கல்லடி, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை மற்றும் களுவங்கேணி ஆகிய இடங்களை சேர்ந்த மொத்தமாக 100 குடும்பங்களுக்கு மூன்று இலட்சம் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று குறித்த மாணவர்கள் தமது சொந்த நிதியில் பெறுமதியான நிவாரணங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments: