News Just In

5/26/2021 07:28:00 AM

கண்ட இடத்தில் கழற்றி வீசப்படும் முகக்கவசங்கள்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

கொரோனா தொற்றிலிருந்து ஒருவர் பாதுகாப்புப் பெற முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். முகக் கவசத்தை ஒருவர் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், பாவித்த முகக் கவசத்தை எப்படி அகற்றி அப்புறப்படுத்த வேண்டும் என்றெல்லாம் ஏராளமான அறிவுறுத்தல்களை சுகாதாரப் பிரிவினர் வழங்கி வருகின்றனர்.

எனினும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயன்படுத்திய முகக் கவசங்களை பொது இடங்களில் பலர் வீசிச் செல்கின்றனர்.

இதனால், ஒருவேளை முகக் கவசங்களை பயன்படுத்தியோர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தால் இவ்வாறு பொது இடங்களில் வீசப்பட்டுக் காணப்படும் முகக் கவசங்கள் மூலம் ஏனையோருக்கும் தொற்றுக்கள் ஏற்படக் கூடும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர்.

மேற்படி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகள், வடிகான்கள், சந்தைப் பகுதிகள் உட்பட சனநடமாட்டம் உள்ள இடங்களில் பொறுப்பற்ற விதத்தில் முகக் கவசங்களை வீசிச் செல்கின்றனர்.

இவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

No comments: