News Just In

5/11/2021 08:13:00 PM

மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- மக்கள் அவதானமாக செயற்படுமாறும் வர்த்தக நிலையங்களை மூடுமாறும் மாநகர முதல்வர் அறிவிப்பு!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை காரணமாக இறப்பு வீதம் அதிகரித்துள்ளதன் காரணமாக பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலை தொடக்கம் மருந்து விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் மாலை 6 மணியுடன் நிறுத்தப்படவேண்டும் எனவும் மீறுவோருக்கு எதிராக கொரோனா தடுப்பு செயலணியின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரத்திற்குள் மக்கள் தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற மக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாநகர முதல்வர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

No comments: