News Just In

5/09/2021 08:06:00 AM

பாடசாலைக்கு அருகில் குண்டு தாக்குதல்- 55 பேர் உயிரிழப்பு; 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்!!


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே சனிக்கிழமை இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் பெண் மாணவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஷியா பெரும்பான்மை சுற்றுப்புறமான டாஷ்தே-இ-பார்ச்சியில் அமைந்துள்ள சையத் அல்-ஷாஹ்தா பாடசாலைக்கு அருகே சனிக்கிழமை இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதுடன், அம்புயூலன்ஸ் வண்டிகள் அவசர சேவைக்காக குறித்த பகுதிக்கு விரைந்து சென்றதாகவும் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் குறிப்பிட்டார்.

"இது பாடசாலை நுழைவாயிலுக்கு முன்னால் நிகழ்ந்த ஒரு கார் வெடிகுண்டு வெடிப்பு" என்று ஒரு சாட்சியம் ரொய்ட்டர் செய்திச் சேவையிடம் கூறியுள்ளது.

பலியானவர்களில் ஏழு அல்லது எட்டு பேரைத் தவிர மற்ற அனைவரும் பாடசாலை மாணவிகள் என்றும் அவர்கள் தங்களது கற்றல் நடவடிக்கையினை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லும் வேளையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாகவும் சாட்சியம் உறுதிபடுத்தியுள்ளது.

குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 என்றும், காயமடைந்தோர் 52 பேர் என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் கூறினார்.

எனுனிம் அந்த எண்ணிக்கை அதன் பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

செப்டம்பர் 11 க்குள் அனைத்து அமெரிக்க படையினரையும் வெளியேற்றுவதற்கான திட்டங்களை வாஷிங்டன் கடந்த மாதம் வொஷிங்டன் அறிவித்ததிலிருந்து காபூல் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.

ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தலிபான் நாடு முழுவதும் தனது தாக்குதல்களை முடுக்கிவிட்டதாகக் கூறினர்.

சனிக்கிழமை நடைபெற்ற அண்மையத் தாக்குதலுக்கு குண்டுவெடிப்புக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி இந்த தாக்குதலை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டதுடன், ஆதாரங்களை மேற்கொள்காட்டாது தலிபான்களை குற்றம்சாட்டினார். எனினும் தலிபான்கள் அதை மறுத்துள்ளனர்.

No comments: