News Just In

5/27/2021 10:04:00 AM

மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 128பேருக்கு கொரோனா தொற்று- காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு பூட்டு...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 128 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் இனங்காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இதுவெனவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் காத்தான்குடி பொலிஸ் நிலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்தில் மொத்தமாக 36 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுணதீவு பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் ஆடைத்தொழிற்சாலையொன்றில் கடமையாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆடைத்தொழிற்சாலை கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து நேற்று புதன்கிழமையில் முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை குறித்த ஆடைத்தொழிற்சாலை பூட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: