தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி இறுதி யுத்தத்தின் போது இலங்கை கடற்படையினரால் இரு பிள்ளைகளுடன் கைது செய்யப்பட்ட போது நடந்த பயங்கர சம்பவங்களை கமாண்டோ மலித் லசந்த விவரித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் குறிப்பிட்ட கருத்துக்கள்,
இறுதி யுத்தத்தின் போது மே மாதம் 13 அல்லது 15 ஆம் திகதியில் இந்த சம்பவம் நடந்தது.
முல்லைத்தீவு கடலில் எங்கள் டோரா யுத்தக் கப்பல் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.
இதன்போது கட்டளை தளபதியாக நான் எப்போதும் கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கருவியின் ஊடாக கண்காணப்பில் ஈடுபட்டிருந்த போது இரவு என்பதால் ஒரு கறுப்பு துளி போல் ஒரு படகு வருவதை கண்டேன்.
இது எனக்கு சரியாக தென்படவில்லை. அப்போது என்னுடன் இருந்த கடற்படை அதிகாரியை அழைத்து பார்க்க சொல்லிவிட்டு நான் தாக்குதல் நடத்த தயாரானேன்.
ஏனென்றால் அந்த சந்தர்ப்பத்தில் சிறிய படகுகளில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதால் எனது அனுபவத்தின் பிரகாரம் அது தற்கொலை படகு என்றே நினைத்தேன்.
அப்போது இந்த படகு கரையில் இருந்து மேல் நோக்கி வந்தது.
நான் அந்த படகுக்கு சமாந்திரமாக பயணித்தேன். கடற்படையின் இன்னுமொரு படகையும் வரச்சொன்னேன்.
நாங்கள் படகின் அருகில் சென்று தாக்குதல் நடத்தினோம். அந்த படகின் வேகம் அதிகரிக்கப்பட்டது.
நாங்கள் இது தற்கொலை படகு தான் நினைத்து நெருங்கமாக செல்லவில்லை. படகின் என்ஜின் நின்று விட்டது.
மிக அருகில் சென்று அதன் ஒளி விளக்கை பார்த்த போது ஒரு பெண்ணுடன் இரு பிள்ளைகள் இருப்பதை கண்டேன். மேலும் பலர் இருந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என்றேன்.
அச்சந்தர்ப்பத்தில் படகை ஓட்டி வந்தவர் மரணமடைந்திருந்தார். பின்னர் வந்த சிறிய கப்பல்களில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது எனக்கு ஒன்றும் தெரியாது. ஏதோ தப்பிச் செல்லும் மக்கள் என நினைத்திருந்தேன். அதன் பின்னர் திருகோணமலை கடற்படை தளத்திற்கு தான் வந்த நிலையில் அங்கு இரு பிள்ளைகளுடன் இருந்த பெண் சூசையின் மனைவி சத்தியாதேவி என்று தெரிந்து கொண்டேன்.
Advertisement
அதன் பின்னர் நான் அவருடன் கதைத்தேன். அவர்களுக்கு சிங்களம் தெரியவில்லை. எமது கடற்படையின் பெண் அதிகாரியின் உதவியுடன் பேசினேன்.
விடுதலைப் புலிகள் தலைவரின் மனைவி
இந்தியா சென்று லண்டனில் இருக்கும் அவர்களின் உறவினர்களுடன் செல்வதற்காகவே வந்துள்ளார் என்பதை அறிந்தேன்
அச்சந்தர்ப்பத்தில் தனது இரு பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று கொடுத்த அழுத்தத்தில் சூசை போக சொல்லியுள்ளார் என தெரிந்துக்கொண்டேன்.
Advertisement
அவர் வெளியோறும் போது விடுதலைப் புலிகள் தலைவரின் மனைவி, பொட்டம்மான் ,சூசை ஆகியோரும் இருந்துள்ளனர்.
தான் பிரபாகரனின் மனைவியை தன்னுடன் வருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். இறுதியில் சூசையையும் அழைத்துள்ளார். அவரும் மறுத்துள்ளார்.
தனக்கு மூன்று பிள்ளைகள் இருந்ததாகவும் ஒருவர் யுத்தத்தில் நீரில் மூழ்கி மரணத்ததால் மற்றைய பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் எண்ணத்தில் வெளியேறி வந்ததாக தெரிவித்திருந்தார்” என கூறியுள்ளார்.

No comments: