News Just In

2/07/2026 09:43:00 AM

சாணக்கியனுக்கு கிடைத்த புதிய பதவி...! யாழில் வெடி கொளுத்தி கொண்டாடும் சுமந்திரன் அணி

சாணக்கியனுக்கு கிடைத்த புதிய பதவி...! யாழில் வெடி கொளுத்தி கொண்டாடும் சுமந்திரன் அணி



இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல்லியடி பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியியின் சுமந்திரன் அணி இனிப்பு வழங்கியும், வெடி கொழுத்தியும் கொண்டாடியுள்ளது.

குறித்த அணி இளைஞர்கள் பொதுமக்கள், மற்றும் பயணிகள், வியாபாரிகளுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கி கொண்டாடியுள்ளனர்.

இதன்போது, சாணக்கியனின் அரசியல் செயல்பாடுகள், மற்றும் தலைமைக் குணங்களைப் பாராட்டும் வகையிலான கருத்துகள் இளைஞர்களால் வெளியிடப்பட்டன.

இதேவேளை அரசமைப்பு பேரவையில் இராணுவ அதிகாரி ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க சிறீதரன் எம். பி. ஆதரவளித்தார் என்று கூறப்படும் விவகாரம் சர்ச்சையானது. இதையடுத்து அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.
Advertisement

இந்த நிலையில் சிறீதரன் பதவி விலகாது விடின் அவர் விலகும் வரை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து அவரை கட்சி நீக்கும் என்று அரசியல் குழு முடிவு எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.



யாழில் அபாயகரமான ஆயுதங்களுடன் இருவர் கைது!


கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரன்பாடு

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நீக்கும் முடிவு கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீநேசன் தெரிவித்துள்ளார்.
Advertisement



தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரன்பாடு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார். எனவே தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமைப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகமுமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

No comments: