News Just In

2/07/2026 09:38:00 AM

பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவி லொரி மோதி பரிதாபமாக பலி!


பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவி பரிதாபமாக பலி


இரத்தினபுரியில் வீதியோரத்தில் நடந்து சென்ற பாடசாலை மாணவி ஒருவர் லொரி மோதி உயிரிழந்துள்ளார்.

எலபத பொலிஸ் பிரிவில் கனதொல-இலுக்தென்ன வீதியில் உள்ள 79 ஆம் இலக்க ரப்பர் தோட்டத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவி இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை

உயிரிழந்த மாணவர் அலுகட்டிய பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



விபத்து தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எலபத பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: