யாழ்ப்பாணத்தில் ஒரு நாளில் சந்திர சிகிச்சை - புதிய கட்டடம் திறந்து வைப்பு.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை இனைந்து,சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பின் (IMHO) நிதி உதவியில்,முற்றிலும் இலவசமான ஒரு நாள் சத்திர சிகிச்சை மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு நாளில் சத்திர சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வாய்ப்பு கிடைக்கும்.
சிறு சிறு சத்திர சிகிச்சைகளுக்காக நீண்ட நாள் காத்திருப்பு மற்றும் அதீத செலவைக் குறைக்கும் நோக்கில் இந்த சந்திர சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்படுள்ளது.
இந்த கட்டடம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பின் பக்க வீதியில் அமைந்துள்ளது. போதனா வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர் ஒருவர் (வழமையான செயற்பாடு) மருத்துவர், மருத்துவர் நிபுணர்களின் ஆலோசனைக்கு பின்னர் குறித்த சிறப்பு சத்திர சிகிச்சை நிலையத்துக்கு உள்வாங்கப்படுவர்.
2/07/2026 09:35:00 AM
யாழ்ப்பாணத்தில் ஒரு நாளில் சந்திர சிகிச்சை - புதிய கட்டடம் திறந்து வைப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: