News Just In

5/27/2021 09:34:00 AM

போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டில் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை!!


போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டில் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தின் 78ஆம் சரத்தின் அடிப்படையில், போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைவைக்கப்படும் கைதிகள் விருப்பம் தெரிவித்தால் மாத்திரமே அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த முடியும்.

எனினும், நீதி அமைச்சருடனும், சட்டமா அதிபர் திணைக்களத்துடனும் கலந்துரையாடி, இதனை கட்டாயமாக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலையில் உள்ளவர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பான புதிய வழிகாட்டல்கள் சட்டமா அதிபரினால் வெளியிடப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, வெளியிலிருந்து சிறைக்குள் செல்பவர்களில், புதிய தொற்றாளர்களிடம் இருந்து தற்போது சிறையில் உள்ளவர்களை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் சிறைச்சாலையில் நிலவும் நெரிசலை குறைப்பதற்கான பரிந்துரைகளாக புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

No comments: