News Just In

4/27/2021 04:41:00 PM

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பிரபல ஊடகவியலாளரான சுதேவ ஹெட்டியாராச்சி நியமனம்!!


ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பிரபல ஊடகவியலாளரான சுதேவ ஹெட்டியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து நியமனக் கடிதத்தை சுதேவ ஹெட்டியாராச்சி இன்று (27) பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

சுதேவ ஹெட்டியாராச்சி அடுத்த வாரம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதேவ ஹெட்டியாராச்சி கொழும்பின் ஆனந்த கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: