News Just In

4/27/2021 04:54:00 PM

திருகோணமலையில் ஆட்டோ வீதியை விட்டு விலகி விபத்து- கணவன் மற்றும் மனைவி இருவரும் படுகாயம்...!!


திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் பம்மதவாச்சி பகுதியில் இன்று முற்பகல் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கணவரும், மனைவியும் படுகாயமடைந்துள்ளனர்.
 
குறித்த விபத்தில் சிக்கிய இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

கிண்ணியாவில் இருந்து மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோவே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் மன்னார்- எருக்கலம்பிட்டி- புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த எம்.ஐ.எம்.பர்ஜுன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.




No comments: