News Just In

3/02/2021 08:51:00 PM

மட்டக்களப்பு வலையிறவு மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை விமானப்படையினரால் புரனமைத்து கையளிக்கும் நிகழ்வு!!


விமானப்படையின் 70 ஆண்டு நிறைவினையிட்டு மட்டக்களப்பு வலையிறவு மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை விமானப்படையினர் புரனமைத்து கையளிக்கும் நிகழ்வு இன்று (02) பாடசாலை அதிபர் இ.இலங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கெப்டன் நிலந்த பியசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாடசாலை கட்டிடத்தினை நாடாவெட்டி திறந்து வைத்து பாடசாலை அதிபரிடம் கையளித்ததுடன் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றினையும் நாட்டித்தார்.

2013 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவினால் இப் பாடசாலைகான கட்டிடம் ஒன்று அமைத்து கொடுத்துள்ளனர் இது பின்னர் பழுதடைந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த பாடசாலைக் கட்டிடங்களை இலங்கை விமானப்படையில் 70 ஆண்டு நிறைவினையிட்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பாடசாலையின் அனைத்து கட்டிடங்களையும் புனர்நிர்மாணித்து நிறம்பூசி பாடசாலையைச் சுற்றி சுற்றுவேலி அமைக்கப்பட்டு இன்று சம்பிராயபூர்வமாக கையளித்தனர்.

இதில் கலந்துகொண்ட குரூப் கெப்டன் நிலந்த பியசேன தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைத்தார். இதனையடுத்து விமானப்படை அதிகாரிக்கு பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர் .

No comments: