News Just In

3/24/2021 03:18:00 PM

திருமண வைபவத்தில் கலந்து கொண்டவருக்கு கொரோனோ- யாழ்.மாநகர முதல்வர் சுய தனிமைப்படுத்தலில்...!!


கடந்த 20 ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டோரை அவதானமாக இருக்குமாறு யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிகழ்வில் முதல்வரும் கலந்துகொண்ட நிலையில் இன்றைய தினம் முதல்வர் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதுடன் தன்னை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்.

அதேவேளை 20 ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டோர் , தனக்காக பி.சி.ஆர் முடிவு கிடைக்கும் வரையில் அவதானமாக இருக்குமாறும் , தம்மை தனிப்படுத்தி கொள்ளுமாறும் முதல்வர் கோரியுள்ளார்.

No comments: