News Just In

3/24/2021 03:34:00 PM

ஜூலை 31 ஆம் திகதி தேசிய விளையாட்டு தினமாக அறிவிப்பு!!


எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவினால் இது தொடர்பில் முன்வைக்கபட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கபட்டுள்ளது.

வழமையாக ஏப்ரல் 6 ஆம் திகதி தேசிய விளையாட்டு தினம் அனுஸ்ட்டிக்கபட்டு வருகின்றது.

இந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் வரும் புதுவருட பிறப்பு மற்றும் பண்டிகை காலத்தை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

No comments: