News Just In

3/18/2026 06:39:00 PM

ஈரானை மிரள வைத்த அதிரடி நடவடிக்கை! உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு களத்தில் வான்வழித் தாக்குதல்

ஈரானை மிரள வைத்த அதிரடி நடவடிக்கை! உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு களத்தில் வான்வழித் தாக்குதல்



ஈரானில் உள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோ வேதியியல் வளாகம் வான்வழித் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) இணைந்த செய்தி நிறுவனமான தஸ்னிம் இதனை தெரிவித்துள்ளது.

செய்தி நிறுவனம் ஃபார்ஸ் News Agency தனது டெலிகிராம் அறிவிப்பில், தாக்குதலுக்கு பின்னர் அந்த நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு களமாக கருதப்படுகிறது.

இந்த களத்தில் ஈரான் மற்றும் கட்டார் ஆகிய இரு நாடுகளும் தங்களது வசதிகளை இயக்கி வருகின்றன. இந்த தாக்குதல் இன்று (புதன்கிழமை) முன்னதாக இடம்பெற்றதாக தஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: