News Just In

3/18/2026 06:37:00 PM

நடிகர் விஜய் பாடலுக்கு தடை ; பறந்த உத்தரவு; ஷாக்கில் ரசிகர்கள்

நடிகர் விஜய் பாடலுக்கு தடை ; பறந்த உத்தரவு; ஷாக்கில் ரசிகர்கள்


இந்தியாவின் தமிழகம் முழுதும் உள்ள பாடசாலைகளில் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் பாடலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள அரச பாடசாலைகளில் ஆண்டு விழாக்களில் நடிகர் விஜயின் திரைப்படப் பாடல்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பாடசாலை ஆண்டு விழாக்களில், நடன நிகழ்ச்சிகளுக்கு, நடிகர் விஜய்யின் பாடல்களே பிரதான தேர்வாக இருந்தன.

தற்போது, அவர் கட்சி ஆரம்பித்துள்ளதால் தமிழகம் முழுதும் நடக்கும் பாடசாலை ஆண்டு விழாக்களில், நடிகர் விஜய்யின் திரைப்பட பாடல்கள் வேண்டாம் என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.

சில பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில், விஜய்யின் பாடல்கள் இசைக்கப்படும்போது, அவரது கட்சி கொடிகளை காண்பித்தும், கட்சியின் பெயரை ஆரவாரமாக உச்சரித்தும், மாணவ, மாணவிகள் காணொளிகளை வெளியிடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாடசாலை விழாக்களில் சினிமா பாடல்களுக்கு மாணவர்கள் நடனம் ஆடுவது தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய் பாடல்களுக்கு தடை போட்ட அறிவுறுத்து கல்வி வட்டாரங்களில் பரவலான விவாதத்தை கிளப்பியுள்ளது.

விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட சமயத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக் கிண்ண போட்டியில் விசில் ஊதவும் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: