.webp)
குளியாப்பிட்டி - மீகஹகொட்டுவ சந்தியில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் மற்றொரு மோட்டார் சைக்கிள் சாரதியை தனது தலைக்கவசத்தால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளியாப்பிட்டி - பன்னல வீதியிலிருந்து வந்த நபர் ஒருவர், குளியாப்பிட்டியிலிருந்து மாதம்பை நோக்கிப் பிரதான வீதியூடாகச் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் சாரதியை வழிமறித்துத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதல் அங்கிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாகவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து உத்தியோகபூர்வ முறைப்பாடு எதுவும் கிடைக்கப் பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, குளியாப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் கமல் ரத்நாயக்க மற்றும் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் நலின் மஹீபால ஆகியோர் தலைமையிலான குழுவினர் தாக்குதலில் ஈடுபட்ட நபரை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
No comments: