News Just In

3/03/2021 10:53:00 AM

பயணப் பையொன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் சடலமாக மீட்பு; காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு ..!!


கொழும்பு, டேம் வீதியில் பயணப் பொதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேநபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர், மொனராகலை படல்கும்புர 5 ஆம் கட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர், புத்தல காவல்நிலையத்தில் கடமையாற்றிய உப காவல்துறை பரிசோதகர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது சடலத்திற்கு அருகில் விஷ குப்பியொன்றும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த உப காவல்துறை பரிசோதகர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

கொழும்பு, டேம் வீதியில் பயணப் பொதியொன்றில் பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அந்த பயணப்பொதியினை விட்டுச்செல்லும் நபர் தொடர்பில் சீ.சி.ரீ.வி காணொளியின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.



No comments: